பண்டஸ்லிகா திருவிழா: முதல் கோல் அடித்த இங்கிலாந்து கேப்டன்..தெறிக்கவிட்ட பாயர்ன் முனிச்
பண்டஸ்லிகா தொடரின் முதல் போட்டியில் பாயர்ன் முனிச் 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
பண்டஸ்லிகா தொடர் ஆரம்பம்
ஜேர்மனியின் பிரபலமான கால்பந்து லீக் தொடரான பண்டஸ்லிகா நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் பாயர்ன் முனிச் மற்றும் SV வெர்டெர் ப்ரீமென் அணிகள் மோதின.
சூப்பர் கோப்பையை தவறவிட்ட பாயர்ன் அணி முழுவீச்சில் களமிறங்கியது. அதன் பலனாக ஆட்டத்தின் 4வது நிமிடத்திலேயே பாயர்ன் அணியின் சனே அபாரமாக கோல் அடித்தார்.
Twitter (@FCBayernEN)
ஹரி கேன் முதல் கோல்
அதனைத் தொடர்ந்து இரண்டாம் பாதியில் ஹரி கேன் (74வது நிமிடம்) பாயர்ன் அணிக்காக தனது முதல் கோலை அடித்தார்.
Twitter (@FCBayernEN)
பின்னர் சனே 90வது நிமிடத்திலும், மெதிஸ் டெல் 90+4வது நிமிடத்திலும் கோல் அடிக்க பாயர்ன் முனிச் அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
பாயர்ன் முனிச் ரசிகர்கள் இந்த வெற்றியை பெரிதளவில் கொண்டாடி வருகின்றனர்.
Twitter (@FCBayernEN)
Twitter (@FCBayernEN)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |