விருது பெறும் இளவரசர் ஹரி- மேகன்... கோடிகளை கொட்டும் அமெரிக்க செல்வந்தர்கள்: வெடித்த சர்ச்சை
அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெறவிருக்கும் விருது வழங்கும் விழாவில் இளவரசர் ஹரி- மேகன் தம்பதியை சந்திக்க பெரும் செல்வந்தர்கள் கோடிகளை வாரி இறைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் 6ம் திகதி மனித உரிமைகளுக்கான சிறப்பு விருது ஒன்றை இளவரசர் ஹரி- மேகன் தம்பதி பெற உள்ளனர். குறித்த விழாவினை முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடியின் மருமகள் கெர்ரி கென்னடி தொகுத்து வழங்க இருக்கிறார்.
விருந்தில் ஹரி- மேகன் தம்பதி
இந்த விழாவில் ஹரி- மேகன் தம்பதிக்கு அருகாமையில் அமர ஆசனம் ஒன்றிற்கு கட்டணமாக 1 மில்லியன் டொலர் வசூலிக்கின்றனர். மேலும், அந்த விழாவிற்கு பின்னர் முன்னெடுக்கப்படும் விருந்தில் ஹரி- மேகன் தம்பதி கலந்துகொள்ள இருப்பதால், அதற்கு அனுமதி கட்டணமாக 500,000 டொலர் வசூலிக்கின்றனர்.
@getty
குறித்த விழாவினை ராபர்ட் எஃப். கென்னடி மனித உரிமைகள் அறக்கட்டளையானது முன்னெடுக்கிறது. இந்த அறக்கட்டளை வழங்கிய மனித உரிமைகள் விருதினை, இதற்கு முன்னர் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, பில் கிளிண்டன், அல் கோர் உட்பட பலர் பெற்றுள்ளனர்.
இந்த விருது அபத்தமானது
இளவரசர் ஹரி- மேகன் தம்பதிக்கு இந்த விருது வழங்குவதில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். பிரபல வரலாற்றாசிரியர் ஒருவர் கூறுகையில், இது அபத்தமானது மட்டுமின்றி அப்பட்டமான கேலிக்குரியது என்றார்.
@getty
இதற்கு முன்னர் இந்த விருதினைப் பெற்றவர்கள் பெயருடன் ஒப்பிட்டுப் பாருங்கள், ஹரி- மேகன் தம்பதி அப்படி என்ன சாதித்து விட்டார்கள் இதுவரை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரண்மனையை விட்டு வெளியேறியதல்லாமல், அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய தொண்டு என்ன என்பது இதுவரை தமக்கு புரியவில்லை என தெரிவித்துள்ளார் ஹாலிவுட் படத் தயாரிப்பாளர் ஒருவர்.
Credit: WIREIMAGE