இளவரசர் ஹரி- மேகன் மெர்க்கல் உறவு சோகத்தில் முடிந்துவிடும்: ராணியாரின் முதன்மை உதவியாளர் வெளிப்படை
இளவரசர் ஹரி- மேகன் தம்பதி தொடர்பில் மறைந்த ராணியாரின் முதன்மை உதவியாளர் லேடி சூசன் ஹஸ்ஸி ஏற்கனவே கூறியுள்ள வார்த்தைகள் தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இளவரசர் ஹரி- மேகன் தம்பதியின் உறவு தொடர்பிலும் அவர்களின் திருமணம் தொடர்பிலும் லேடி சூசன் ஹஸ்ஸி வெளிப்படையாக பேசியுள்ளார். 2018ல் ஹரி- மேகன் தம்பதியின் திருமணத்திற்கும் 5 மாதங்கள் முன்பு லேடி சூசன் ஹஸ்ஸி தமது கருத்தை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
@getty
சோகத்தில் முடியலாம்
ஹரி- மேகன் தம்பதியின் எதிர்காலம் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு, லேடி சூசன் ஹஸ்ஸி குறிப்பிடுகையில், சோகத்தில் முடியலாம், குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என அப்போதே தெரிவித்துள்ளார்.
ராணியாருக்கு மிக நெருக்கமான வட்டத்தில் இருந்தவர் இந்த லேடி சூசன் ஹஸ்ஸி, மட்டுமின்றி, ராணியாரின் மிக நெருங்கிய தோழிகளில் இவரும் ஒருவர் என்றே கூறப்படுகிறது.
@getty
1982ல் ஹரி பிறந்த போது லேடி சூசன் ஹஸ்ஸியை கெளரவிக்க முடிவு செய்த அப்போதைய வேல்ஸ் இளவரசர் சார்லஸ், ஹரியின் ஞானத்தாயார்களில் ஒருவராக லேடி சூசன் ஹஸ்ஸியை தெரிவு செய்துள்ளார்.
வேல்ஸ் இளவரசர் சார்லஸ்
மேலும், பிரித்தானிய அரண்மனையில் 1960ல் இருந்தே லேடி சூசன் ஹஸ்ஸி பணியாற்றி வருகிறார். லேடி சூசன் ஹஸ்ஸி மீதிருந்த நன்மதிப்பு காரணமாகவே, இளவரசர் பிலிப் காலமானபோது, இறுதிச்சடங்குகளில் கலந்துகொள்ள புறப்பட்ட ராணியாரின் காரில் அவருடன் பயணிக்கும் வாய்ப்பை லேடி சூசன் ஹஸ்ஸி பெற்றார்.
@getty
கடைசியாக, ராணியார் காலமான போது, அவரது இறுதிச்சடங்குகளில் லேடி சூசன் ஹஸ்ஸி பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.