ட்ரம்பின் ஹார்வர்டு சுழலில் சிக்கிய கனடா பிரதமரின் மகளும் இளவரசி ஒருவரும்
சர்வதேச மாணவர்களைச் சேர்ப்பதற்கான தகுதியை ரத்து செய்த அமெரிக்க நிர்வாகத்தின் முடிவை எதிர்த்து ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வழக்குத் தொடர்ந்தது.
தற்காலிக தடை
இந்த வழக்கில், ட்ரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கையானது முதல் சட்டத் திருத்தத்தை மீறுவதாகவும், இந்த நடவடிக்கை அதன் 7,000 சர்வதேச மாணவர்கள் மீது உடனடி மற்றும் கடுமையான விளைவை ஏற்படுத்தும் என்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் கூறியது.
மட்டுமின்றி, இந்த வழக்கில் அதிரடி நடவடிக்கையாக ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்கும் திறனை ட்ரம்ப் நிர்வாகம் ரத்து செய்ததற்கு அமெரிக்க நீதிபதி ஒருவர் தற்காலிக தடை வழங்கியுள்ளார்.
ட்ரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கை நீடித்தால், ஐவி லீக் பல்கலைக்கழகம் 2 ஆண்டுகளுக்கு வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்க முடியாது. மட்டுமின்றி, ஏற்கனவே உள்ள மாணவர்கள் தங்கள் மாணவர் விசாக்களைத் தக்கவைத்துக்கொள்வதற்காக மற்ற அமெரிக்க கல்லூரிகளுக்கு மாற்றும் கட்டாயம் ஏற்பட்டது.
இதனிடையே கனடாவில் இருந்து வெளியான தகவலின் அடிப்படையில், ஹார்வர்டில் 686 கனேடிய மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. இவர்களில் தற்போதைய கனேடிய பிரதமர் மார்க் கார்னியின் மகளும் ஒருவர்.
இளவரசி எலிசபெத்
கிளியோ கார்னி ஹார்வர்டில் தனது முதலாமாண்டு படிப்பை முடித்துள்ளார். ட்ரம்பால் வெளியேற்றப்படும் நெருக்கடியில் சிக்கியுள்ள இன்னொருவர் பெல்ஜியம் இளவரசி எலிசபெத்.
பெல்ஜியம் பட்டத்து இளவரசியான எலிசபெத் ஹார்வர்ட் கென்னடி பள்ளியில் பொதுக் கொள்கையில் இரண்டு வருட முதுகலைப் படிப்பில் தனது முதல் ஆண்டை முடித்துள்ளார்.
தற்போது, அவர் பெல்ஜியத்தில் இருக்கிறார். அரண்மனை நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், அவர் இரண்டாவது வருடம் கல்விக்காக ஹார்வர்ட் திரும்ப முடியுமா என்பது குறித்த விளக்கத்திற்காகக் காத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |