டெல்லியில் பலத்த நிலநடுக்கத்தால் குலுங்கிய கட்டிடங்கள் - பீதியில் மக்கள்
டெல்லியில் இன்று(ஜூன் 10) காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
டெல்லி நிலநடுக்கம்
இந்திய தலைநகர் டெல்லியில் இன்று காலை 9;04 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஹரியானாவின் ஜஜ்ஜர் நகரை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சுமார் 1 நிமிட அளவிற்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 10 கிமீ ஆழத்தில் 4.4ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
EQ of M: 4.4, On: 10/07/2025 09:04:50 IST, Lat: 28.63 N, Long: 76.68 E, Depth: 10 Km, Location: Jhajjar, Haryana.
— National Center for Seismology (@NCS_Earthquake) July 10, 2025
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjcVGs @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/uDNjvD8rWT
ஜஜ்ஜர் நகரில் இருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் உள்ள மேற்கு உத்தரபிரதேசத்தின் மீரட் வரை நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
டெல்லி, நொய்டா, காசியாபாத், குருகிராம் மற்றும் ஃபரிதாபாத் ஆகிய இடங்களிலும் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்தபடி பாதுகாப்பான இடத்திற்கு ஓடினர்.
நிலநடுக்கத்தால், அலுவலகத்தில் இருந்த கணினிகள் குலுங்கியதாக ஊழியர்கள் தெரிவித்தனர். பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்றும், படிகள் வழியாக இறங்கி, திறந்த வெளிக்கு வருமாறு தேசிய பேரிடர் மீட்புப் படை அறிவுறுத்தியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |