சிறுநீர் கழித்ததை தட்டிக் கேட்ட இளைஞருக்கு நேர்ந்த சோகம்! சுட்டுக்கொல்லப்பட்டார்
அமெரிக்காவில் ஹரியானாவை சேர்ந்த இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய இளைஞர்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தான் வேலை பார்த்த கடைக்கு வெளியே சிறுநீர் கழித்த நபரை தட்டிக்கேட்ட இந்தியாவின் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த 26 வயது இளைஞர் கபில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சோகத்தில் மூழ்கியுள்ள கபிலின் குடும்பத்தினர், தற்போது அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய மற்றும் ஹரியானா மாநில அரசின் உதவியை நாடி வருகின்றனர்.
இந்நிலையில் கபில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மெக்சிகோ எல்லைகளை தாண்டி சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு நுழைந்தது தெரியவந்துள்ளது.
கபிலின் சட்டவிரோத பயணத்திற்காக அவரது குடும்பம் கிட்டத்தட்ட ரூ.45 லட்சம் செலவு செய்துள்ளது.
அமெரிக்காவிற்கு நுழைந்த உடன் கபில் கைது செய்யப்பட்ட போதிலும், பின்னர் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டு அமெரிக்காவில் வசித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |