தாய்லாந்திற்கு இந்த பார்சலை அனுப்பிருக்கீங்க.., என்ஜினீயரிடம் ரூ.8.29 லட்சம் மோசடி செய்த கும்பல்
தமிழக மாவட்டம், சேலத்தில் உள்ள எஞ்சினியர் ஒருவரிடம் ரூ.8.29 லட்சத்தை மோசடி செய்த கும்பலை பொலிஸார் தேடி வருகின்றனர்.
தாய்லாந்திற்கு அனுப்பிய பார்சல்
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள முத்தம்பட்டியை சேர்ந்த என்ஜினியர் ஒருவர் பெங்களூருவில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த செப்டம்பர் 23 -ம் திகதி மொபைலுக்கு அழைப்பு வந்தது.
அப்போது, மும்பையில் இருந்து நீங்கள் தாய்லாந்திற்கு தடை செய்யப்பட்ட மருத்துவ பொருள்கள் அனுப்பியுள்ளீர்கள் என கூறினார்கள். ஆனால், எந்த பார்சலும் அனுப்பவில்லை என்று என்ஜினியர் கூறினார்.
அதற்கு, நாங்கள் சைபர் கிரைம் பொலிஸ் என்றும், உங்களது பெயரில் தான் சென்றுள்ளது என்றும் அங்க கும்பல் கூறியுள்ளது. மேலும், இந்த வழக்கில் உங்களை விடுவிக்க வேண்டுமென்றால் ரூ.27 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
ரூ.8.29 லட்சம் மோசடி
இதனால், பயந்து போன எஞ்சினியர் 3 தவணைகளாக ரூ.8 லட்சத்து 29 ஆயிரத்து 348 -யை அவர்களது வங்கிக்கணக்கிற்கு அனுப்பியுள்ளார். தொடர்ந்து கூடுதல் பணம் கேட்டதால் சந்தேகமடைந்த என்ஜினியர், சேலம் மாவட்ட சைபர் கிரைம் பொலிஸில் புகார் அளித்தார்.
அதன்படி விசாரணை நடத்தியதில், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த கும்பல் மோசடி செய்துள்ளது என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |