சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்!
ஹவாய் கடற்கரை துறைமுகத்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து பெண் சுற்றுலா பயணி ஒருவர் கப்பலுக்கு ஓடிய திக் திக் நிமிடங்களை செய்தி நிறுவனத்திடம் விவரித்துள்ளார்.
பசிபிக் முழுவதும் சுனாமி எச்சரிக்கை
ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள கம்சட்கா தீபகற்பத்திற்கு அருகில் ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம், பசிபிக் பெருங்கடல் முழுவதும் தொடர்ச்சியான சுனாமி அலைகளை உருவாக்கியுள்ளது.
இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதன் முதல் அலைகள் ஏற்கனவே ஹவாய் தீவை தாக்கியுள்ளன. ஓவாஹு கடற்கரையில் 4 அடி (1.2 மீட்டர்) உயர அலைகள் பதிவாகியுள்ளன.
NOW - Tsunami waves hit Russian coast along Severo-Kurilsk. pic.twitter.com/1cxuFHohVL
— Disclose.tv (@disclosetv) July 30, 2025
பாதிக்கப்பட்ட பகுதிகளின் ஆளுநர்கள், மக்கள் வெளியேற்ற நடவடிக்கைகளை பின்பற்றும்படி வலியுறுத்தி வருகின்றனர். ஹவாய் ஆளுநர் ஜோஷ் கிரீன், மக்கள் அமைதியாக இருக்கும்படியும், அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அமெரிக்கர்கள் சுனாமி எச்சரிக்கைகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
ஜப்பானின் வானிலை ஆய்வு மையம், வடக்கு இவாடே மாகாணத்தில் 4.3 அடி (1.3 மீட்டர்) உயர அலைகள் தாக்கியதாகத் தெரிவித்துள்ளது.
இதனால், சுமார் 1.9 மில்லியன் மக்கள் வெளியேற்றப்பட்டனர். பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, குவாம், பெரு மற்றும் ஈக்வடார் அருகே உள்ள கலபகோஸ் தீவுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவசரமாக துறைமுகத்திலிருந்து வெளியேறிய கப்பல் பயணிகள்
இந்த குழப்பமான சூழலில், ஹவாயில் நங்கூரமிட்டிருந்த ஒரு கப்பலில் இருந்த பயணி ஒருவர், அவசரமாக வெளியேற்றப்பட்டதை பிபிசி-யிடம் விவரித்துள்ளார்.
மாக்கேல்ஸ்ஃபீல்டைச் சேர்ந்த ரேச்சல் பர்ரோஸ் என்ற அந்தப் பெண், ஒரு சுற்றுலாவில் இருந்தபோது, "உடனடி ஆபத்து" என்று எச்சரிக்கும் அவசரச் செய்தியைத் தனது தொலைபேசியில் பெற்றார்.
"கடைகள் மூடப்பட்டன, சைரன்கள் ஒலித்தன, எல்லோரும் கப்பலுக்குத் திரும்ப ஓடினர்" என்று பர்ரோஸ் கூறினார்.
கப்பல் அவசரமாக கடலுக்குச் செல்வதற்கு முன், உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்ட கடைசி நபர்களில் அவரும் ஒருவர். கப்பலில் ஏற முடியாதவர்கள், உயரமான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |