கடைசி ஒருநாள் போட்டியில் டிராவிஸ் ஹெட் அதிரடி சதம்! மிட்சேல் மார்ஷ் நிதானமாக 100 ரன்
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் அதிரடி சதம் விளாசினார்.
சரவெடி ஹெட்
மெக்கேயில் நடந்து வரும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாடி வருகிறது.
The horns are out and the hundred is up for Travis Head! What a player. @BKTtires | #PlayoftheDay | #AUSvSA pic.twitter.com/VN89Zjl7KH
— cricket.com.au (@cricketcomau) August 24, 2025
டிராவிஸ் ஹெட் (Travis Head) மற்றும் மிட்சேல் மார்ஷ் (Mitchell Marsh) இருவரும் மிரட்டலான ஆட்டத்தை தொடங்கினர்.
மார்ஷ் நிதானமாக ஆட, மறுமுனையில் ஹெட் சரவெடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 32 பந்துகளில் அரைசதம் அடித்த ஹெட், 79 பந்துகளில் சதம் விளாசினார். இது அவரது 7வது ஒருநாள் போட்டி சதம் ஆகும்.
மார்ஷ் சதம்
மறுமுனையில் மிட்சேல் மார்ஷ் நிதானமாக ஆடி 4வது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். 105 பந்துகளில் அவர் இந்த ஸ்கோரை எட்டினார்.
அணியின் ஸ்கோர் 250 ஆக உயர்ந்தபோது டிராவிஸ் ஹெட் 142 (103) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 5 சிக்ஸர், 17 பவுண்டரிகள் அடங்கும்.
மிட்சேல் மார்ஷ் 5 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்கள் எடுத்த நிலையில் செனுரன் முத்துசாமி பந்துவீச்சில் அவுட் ஆனார்.
Mitch Marsh got onto this one well and the crowd catch was very solid! #AUSvSA pic.twitter.com/cTkruP1dcZ
— cricket.com.au (@cricketcomau) August 24, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |