லண்டனில் படிப்பு... 100 தாலிபான்களை கொன்று துணிச்சலுடன் முன்னேறும் இளைஞர்: யார் இவர் தெரியுமா?
பிரித்தானியாவில் கல்வி பயின்று ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிராக போராடும் இளைஞர் தொடர்பில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் மொத்த மாகாணங்களும் தாலிபான்களால் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் பஞ்ஷிர் மாகாணம் மட்டும் தாலிபான்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் பஞ்ஷிர் மாகாணத்தின் புகழ்பெற்ற தளபதியின் மகன் தாலிபான்களுக்கு எதிராக துணிந்து போரிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Ahmad Massoud என்ற 32 வயது நபர் தமது கடைசி மூச்சு வரையில் தாலிபான்களுக்கு எதிராக போரிடுவதை நிறுத்துவதில்லை என அறிவித்துள்ளார். இதுவரை 100 தாலிபான்கள் வரையில் கொன்றுள்ளதாக கூறும் Ahmad Massoud, தம்முடன் இருக்கும் போரா:ளிகள் தாலிபான்களுக்கு ஒருபொழுதும் அடிப்பணியப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
காபூல் நகருக்கு வடக்கே அமைந்துள்ள பஞ்ஷிர் பிராந்தியத்திற்கு தற்போது அமெரிக்கா, பிரித்தானியா ராணுவத்தினரால் பயிற்சி அளிக்கப்பட்ட போராளிகள் திரண்டு வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானின் முதன்மை உளவாளிகளில் ஒருவராக செயல்பட்டு வந்தவரும் வெளியேற்றப்பட்ட முன்னாள் துணை ஜனாதிபதியுமான Amrullah Saleh என்பவர் Ahmad Massoud-ன் இந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்துள்ளார்.
மேலும், ஆப்கானிஸ்தானில் தற்போதைய குழப்பமான சூழல் காரணமாக உள்நாட்டு கலவரம் வெடிக்கும் ஆபத்து இருப்பதாக அஞ்சப்படுகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் Ahmad Massoud படையினருக்கு பெரும் ஆதரவு குவிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாலிபான்கள் பல முனைகளில் இருந்து தாக்கப்படுவதால், தற்போது வடக்கு நோக்கி தாலிபான்களில் படை நகர்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. Ahmad Massoud-ன் தந்தை பஞ்ஷிர் பகுதியின் முக்கிய தளபதியாக விளங்கியவர்.
அமெரிக்க ராணுவத்தின் ஆதரவுடன் தாலிபான்களுக்கு எதிராக கடும் போரிட்டவர். தாலிபான்களால் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மட்டும் அச்சுறுத்தல் இல்லை. தாலிபான்களிடம் சிக்கியுள்ள ஆப்கானிஸ்தான், இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாத குழுக்களின் முக்கிய பகுதியாக மாறும் சூழல் தான் ஆபத்தானது என்கிறார் Ahmad Massoud.
மட்டுமின்றி தாலிபான்களுக்கு எதிரான இந்த போரில் தங்களுக்கு ஆயுதங்களும் உதவியும் தேவை என்ற கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்.
பிரித்தானியாவில் உள்ள ராணுவ கல்லூரியில் ஓராண்டு காலம் பயின்ற Ahmad Massoud, லண்டன் கிங்ஸ் கல்லூரியில் பட்டப்படிப்பையும் முடித்துள்ளார்.