2 டீஸ்பூன் வறுத்த ஓமம்! தினமும் ஒரு கிளாஸ் காலையில் வெறும் வயிற்றில் இப்படி குடிச்சுப் பாருங்க
வீட்டின் சமையலறையில் வைக்கப்படும் ஓமம் பல உடல்நல பிரச்சனைகளில் இருந்து விடுபட பயனுள்ளதாக இருக்கும்.
இது குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு வெவ்வேறு வழிகளில் பயனளிக்கிறது.
ஓமத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின், ரிபோபிளவின், நியாசின் போன்ற பல வகையான சத்துக்கள் நிறைந்துள்ளது.
இதனை வறுத்து தினமும் ஒரு கிளால் தினமும் சேர்த்து குடிப்பதனால் நன்மைகள் கிடைக்கின்றது. அந்தவகையில் இதனை எப்படி எடுத்து கொள்ளலாம். இதன் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.
தேவையானவை
- பெருஞ்சீரகம் விதைகள் – 1 தேக்கரண்டி
- சீரகம் – 1 தேக்கரண்டி
- ஓமம் – 1 தேக்கரண்டி
- இஞ்சி – 1 அங்குலம்
எப்படி தயாரிப்பது?
மேலே கொடுக்கப்பட்டுள்ள நான்கு பொருட்களையும் ஒரு கிளாஸ் தண்ணீரில் 3-4 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
அவை நன்றாக ஆறிய பின்னர் பருகலாம்.இந்த பானத்தை வெறும் வயிற்றில் பருகவும்.
இது செரிமானத்திற்கு உதவுகிறது, வீக்கத்தைக் குறைக்கிறது, ஆக்ஸிஜனேற்ற அளவை அதிகரிக்கிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது.
நன்மைகள்
- தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஓம தண்ணீரை குடித்து வந்தால், அஜீரணத்தை குறைக்கலாம். இரண்டு டீஸ்பூன் வறுத்த ஓம விதைகளை ஒரு கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். இதை கொதிக்க வைத்து குடிக்கும் முன் ஆறவிடவும்.
- எடை அதிகரிக்கமால் உங்கள் தினசரி உணவில் ஒரு கிளாஸ் ஓம தண்ணீரைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- கர்ப்பிணிப் பெண்களுக்கு மலச்சிக்கல் மற்றும் வீக்கம் பொதுவானது. இவற்றைத் தவிர்க்க, ஒரு கிளாஸ் ஓம விதைகளை தண்ணீரில் வேகவைத்து சாப்பிடுவது அதிசயங்களைச் செய்யும்.
- ஒழுங்கற்ற உணவுப் பழக்கம் மற்றும் நொறுக்குத் தீனிகளை உட்கொள்வது அமிலத்தன்மையை அதிகரிக்கிறது. இதை ஓமம் கட்டுப்படுத்துகிறது.
- வாயுத்தொல்லையை போக்க ஓம தண்ணீரை குடிப்பது அல்லது உணவுகளில் சேர்ப்பது இந்த நிலையின் தீவிரத்தை குறைக்க உதவும்.
- ஒரு சில துளசி இலைகள் மற்றும் ஒரு டீஸ்பூன் ஓம விதைகளை தண்ணீரில் வேகவைத்து சாப்பிடுவது சளி மற்றும் இருமலின் விளைவை கணிசமாகக் குறைக்கும்