எபோலாப் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் சுகாதாரத்துறை... அதிகரிக்கும் அச்சம்
காங்கோவின் க்பாங்பா இடம்பெயர்ந்தோர் முகாமில், இரண்டு வாரங்களுக்கு முன்பு எபோலா பாதிப்பால் இறப்புகள் பதிவானதைத் தொடர்ந்து, நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்கும் நோக்கில், சுகாதாரப் பணியாளர்கள் தீவிரமாகச் செயல்படத் தொடங்கியுள்ளனர்.
22 முகாம்கள்
குறித்த முகாமை அணுகுவதை சுகாதாரப் பணியாளர்களையும், உலக சுகாதார அமைப்பையும், பிற தொண்டு நிறுவனங்களையும் உள்ளூர் மக்கள் அனுமதிக்க மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 30,000 மக்கள் வசிக்கும் அந்த முகாமில் எபோலா பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், ஆனால் சுகாதாரப் பணியாளர்களால் எதுவும் செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளதாகவும் கூறுகின்றனர்.
நிசி சுகாதார மண்டலத்தில் இடம்பெயர்ந்தவர்களுக்கான 22 முகாம்கள் உள்ளதாகவும், அதில் சுமார் 81,124 பேர்கள் வசிப்பதாகவும், சில விழிப்புணர்வுச் செய்திகளைத் தவிர, இந்தப் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
ஒரு மாதத்திற்கு முன்பு நோய் பரவல் அறிவிக்கப்பட்டதிலிருந்து, வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தங்கள் அன்புக்குரியவர்களை அடக்கம் செய்ய முடியாமல் கோபமடைந்த உள்ளூர் மக்களாலும், அல்லது எபோலா ஒரு பொய் என்று உறுதியாக நம்பியவர்களாலும் பல சிகிச்சை மையங்கள் தாக்கப்பட்டன.

5 மில்லியனுக்கும் அதிகமான
இந்த நிலையில், பல இடம்பெயர்ந்தோர் முகாம்களில், சில சமயங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒரே கழிப்பறையைப் பகிர்ந்துகொள்வதாலும், திறந்தவெளியில் மலம் கழிப்பது சாதாரணமாக இருப்பதாலும், எபோலா நோய் வேகமாகப் பரவக்கூடும் என்று சுகாதாரப் பணியாளர்கள் அஞ்சுகின்றனர்.
ஏற்கனவே உலகின் மிகப்பெரிய நோய்ப் பரவல்களில் ஒன்றாக மற்றியுள்ள நிலையில், தற்போது உருவாகியுள்ள இதுபோன்ற சிக்கல்கள் நோய் பரவலை வேகப்படுத்தும் என்றே அஞ்சுகின்றனர்.

நோய்ப் பரவலால் பாதிக்கப்பட்ட இடுரி, தெற்கு கிவு மற்றும் வடக்கு கிவு ஆகிய மூன்று மாகாணங்களிலும் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதி முழுவதும் நோய்த்தொற்றுப் பதிவுகள் உள்ள நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களைப் போலவே, க்பாங்பாவிலும் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் சுகாதாரப் பணியாளர்கள், உள்ளூர் மக்களால் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |