ஹீத்ரோ விமான நிலையம் தற்காலிகமாக மூடல்: எதிர்பாராத மின்தடை! பயணிகளுக்கு எச்சரிக்கை
மின் பாதிப்புகள் காரணமாக பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
ஹீத்ரோ விமான நிலையம் மூடல்
லண்டன் ஹீத்ரோ விமான நிலையம்(Heathrow Airport) முழுவதும் "கடுமையான மின்தடை" ஏற்பட்டதால், விமான நிலையம் இன்று நள்ளிரவு வரை முழுமையாக மூடப்பட்டுள்ளது.
மேற்கு லண்டனில் உள்ள ஹேஸ்(Hayes) மின் துணை நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இதனால், விமான நிலையத்திற்கு பயணம் செய்வதை தவிர்க்கவும், தங்கள் விமான நிறுவனங்களை உடனடியாக தொடர்பு கொள்ளவும் பயணிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஹீத்ரோ விமான நிலையம் எக்ஸ் (X) சமூக வலைதளம் மூலம் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Due to a fire at an electrical substation supplying the airport, Heathrow is experiencing a significant power outage.
— Heathrow Airport (@HeathrowAirport) March 21, 2025
To maintain the safety of our passengers and colleagues, Heathrow will be closed until 23h59 on 21 March.
Passengers are advised not to travel to the airport… pic.twitter.com/7SWNJP8ojd
அதில், "மின் துணை நிலையத்தில் ஏற்பட்ட தீ காரணமாக, ஹீத்ரோவில் குறிப்பிடத்தக்க மின் தடை ஏற்பட்டுள்ளது." இதனால், பாதுகாப்பு கருதி, மார்ச் 21 அன்று இரவு 11.59 மணி வரை ஹீத்ரோ விமான நிலையம் மூடப்படுவதாக தெரிவித்துள்ளது.
மேலும் விமான நிலையம் பயணிகளிடம் தங்களது மன்னிப்பு கோரியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |