மைனஸ் 15 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை..தவிக்கும் 40,000 மக்கள்
Heating main break in russian far east city: ரஷ்யாவின் தூர கிழக்கு நகரமொன்றில் வெப்பமூட்டும் முதன்மைக் குழாய் உடைந்தது.
ரஷ்யாவின் Khabarovsk நகரில் வெப்பமூட்டும் முதன்மைக் குழாய் ஒன்று உடைந்ததால், சுமார் 40,000 மக்கள் தவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை மைனஸ் 15 டிகிரி செல்ஸியஸ்
ரஷ்யாவின் தூர கிழக்கு நகரமான Khabarovsk-யில் சனிக்கிழமையன்று வெப்பநிலை மைனஸ் 15 டிகிரி செல்ஸியஸ் ஆக இருந்துள்ளது.
அப்போது அந்நகரின் தொழித்துறை மாவட்டத்தில் வெப்பமூட்டும் முதன்மைக் குழாய் ஒன்று உடைந்துள்ளது.
அதன் விளைவாக 125 குடியிருப்பு கட்டிடங்கள் உட்பட 147 கட்டிடங்களுக்கான சேவை பாதிக்கப்பட்டது.
40,000 மக்கள் தவிப்பு
அதனைத் தொடர்ந்து, பணியாளர்கள் சில கட்டிடங்களுக்கு மாற்று வழியின் மூலம் வெப்ப சேவையை மீண்டும் வழங்கினர்.
ஆனாலும், காலை நிலவரப்படி 82 கட்டிடங்களில் இன்னும் வெப்பமும், சுடுநீரும் கிடைக்காத நிலை நீடித்தது.
சுமார் 40,000 மக்கள் வெப்பமும், சுடுநீரும் இன்றி தவிக்கும் சூழல் ஏற்பட்டதாக பிராந்திய ஆளுநர் டிமித்ரி டெமெஷின் தெரிவித்தார்.
Flegontova மற்றும் Stroitel ஆகிய பகுதிகள் மற்றும் Industrialnaya தெருவில் உள்ள பல கட்டிடங்களில் வசிப்பவர்கள் வெப்ப வசதி துண்டிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.
