வீரர்களை குவிக்கும் ரஷ்யா: பயங்கர சண்டைக்கு தயாராகும் கெர்சன் நகரம்
கெர்சன் நகரில் மிகப் பெரிய சண்டை ஏற்படலாம்.
நகரில் உள்ள ஆண்களை உள்ளூர் ஆயுதப் படைகளில் இணையுமாறு ரஷ்யா அறிவுறுத்தல்.
ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கெர்சன் நகரில் மிகப் பெரிய சண்டை ஏற்படலாம் என உக்ரைனிய ஜனாதிபதியின் ஆலோசகர் Oleksiy Arestovych நேற்றிரவு தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட நகரங்களில் மிக முக்கியமான பகுதியாக கெர்சன் நகரம் பார்க்கப்படுகிறது, ஏனென்றால் இந்த கெர்சன் நகரம் கடந்த 2014ம் ஆண்டு ஆக்கிரமிக்கப்பட்டு ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கிரிமியாவின் நுழைவு வாயிலாக பார்க்கப்படுகிறது.
எனவே ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருந்து நகரை விடுவிக்கும் நோக்கில் உக்ரைனிய ஆயுதப்படைகள் தீவிர தாக்குதல் நடத்த நகரை சுற்றி வளைத்துள்ளனர்.
Sky news
இதற்கிடையில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் கெர்சன் நகரில் இருந்து பொதுமக்கள் அனைவரையும் உடனடியாக வெளியேறுமாறு ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர்.
அத்துடன் அந்த நகரில் உள்ள ஆண்களை உள்ளூர் ஆயுதப் படைகளில் இணையுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கெர்சன் நகரில் எல்லாம் தெளிவாக உள்ளது, கெர்சன் நகரை ரஷ்ய படைகள் கைவிடுவதாக தெரியவில்லை, வீரர்களை ரஷ்யா நிரப்புகிறது, அங்கு தங்கள் குழுவை வலுப்படுத்துகிறார்கள் என உக்ரைனிய ஜனாதிபதியின் ஆலோசகர் Oleksiy Arestovych நேற்றிரவு தெரிவித்துள்ளார்.
Wikimedia Commons
கூடுதல் செய்திகளுக்கு: இந்திய ரூபாய் நோட்டுகளில் விநாயகர் மற்றும் லட்சுமி படங்கள்: டெல்லி முதலமைச்சர் வேண்டுகோள்
இதனால் இந்த நகரை யாரும் கைவிடப்போவது இல்லை என்பது தெளிவாக தெரியவந்துள்ளது, எனவே கெர்சன் நகரில் மிக அழுத்தமான போர் தாக்குதல் நடைபெற போகிறது என தெரிவித்துள்ளார்.