தலிபான்களால் கதிகலங்கிய காபூல் மக்கள்.. 17 பேர் பலி! வெளியான அதிர வைக்கும் வீடியோ
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கொண்டாட்டத்தில் ஈடுபடும் வகையில் தலிபான் போராளிகள் வானை நோக்கி சரிமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 17 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நேற்று இரவு காபூல் நகரில் வானை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தி தலிபான் போராளிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தலிபான்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதற்கு PANJSHIR பள்ளத்தாக்கை கைப்பற்றிது, ஆப்கானிஸ்தான் புதிய அரசின் தலைவராக முல்லா பராதர் தேர்வு செய்யப்பட்டது என இரு காரணங்கள் கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு சத்தத்தை கேட்க முடியாமல் காபூல் மக்கள் குறிப்பாக குழந்தைகள் பயத்தில் நடுங்கியுள்ளனர்.
இதனையடுத்து, இனி கொண்டாட்டத்தில் ஈடுபடும் வகையில் வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு தடை விதிப்பதாக தலிபான் தலைமை அறிவித்துள்ளது.
According to TB sources, Mawlawi Muhammad Yaqoob has issued strict orders against aerial firing.
— Avais (@awvais) September 4, 2021
From now onwards anyone caught doing aerial firing will be punished as per the law and will be put in jail.
Their weapons will be confiscated.#Taliban #Afghanistan #MawlawiYaqoob pic.twitter.com/d376LZLXf9
இந்நிலையில், நேற்றிரவு காபூல் நடந்து துப்பாக்கிச் சூடு கொண்டாட்டத்தால் 17 பேர் பலியானதாக, 41 காயமடைந்ததாக காபூலில் உள்ள காபூலில் அவசர மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.