கினியாவில் பயங்கர துப்பாக்கிச் சூடு... நகரம் முழுவதும் இராணுவ வீரர்கள் குவிப்பு!
கிழக்கு ஆப்பிரிக்கா நாடான கினியா தலைநகர் கோனாக்ரியில் பயங்கர துப்பாக்கிச் சூடு கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை தலைநகர் கோனக்ரியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகே பயங்கர துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டுள்ளது.
அதேசமயம், தலைநகரில் உள்ள தெருக்களில் கவச வாகனங்கள் மற்றும் லொறிகளில் இராணுவ வீரர்களை ரோந்து சென்றுள்ளனர்.
பெரும்பான்மையான அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள கலூம் சுற்றுப்புறத்துடன் பிரதான நிலப்பகுதியை இணைக்கும் பாலம் மூடப்பட்டுள்ளதாகவும், ஆயுதங்களுடன் இராணுவ வீரர்கள் ஜனாதிபதி மாளிகையை சுற்றி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவ வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ஆல்பா கான்டே காயமடையவில்லை என்று மூத்த அரசாங்க அதிகாரி கூறியுள்ளார், ஆனால் ஜனாதிபதி குறித்த மேலதிக விவரங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.
சமூக ஊடகங்களில் வெளியான காட்சிகளில், நகரில் பயங்கர துப்பாக்கிச் சூடு கேட்பதை காட்டுகிறது.
?URGENT :: Peur sur Conakry!
— Malibook (@Malibooknews) September 5, 2021
Une attaque en cours contre le palais présidentiel de SekouToureya en Guinée Conakry. pic.twitter.com/iwwk0e0iWa
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியல்லை, கினியா அதிகாரிகள் இதுகுறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
அதேசமயம் மூன்று வீரர்கள் கொல்லப்பட்டதாக மற்றும் குடிமக்கள் சிலர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
From my residence in Conakry pic.twitter.com/BvbhxG9tDg
— Wahab Ahmed (@wahabahmed) September 5, 2021