வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி! எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையத்தின் அறிக்கை
வடக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் வரும் 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாகவும், இது பருவமழையை உருவாக்கும் காரணியாக இருக்கும் என்பதால் தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை தொடரும் என்றும், கடலோர பகுதிகளில் மாலை நேரங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் நேற்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, இன்று காலை வடக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது. தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளுக்கு அருகே புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது உருவானது.
தென்மேற்கு பருவமழை இந்த மாதத்துடன் முடிவடையும் சூழலில் இந்தியாவில் மழைக்கான வாய்ப்பை இது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக கோவை, திருவள்ளூர், வேலூர் உட்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வங்கக் கடல், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |