தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் மே 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் மே 13-ஆம் திகதி சேலத்திலும் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 10 முதல் 13-ஆம் திகதி வரை தமிழகத்தில் சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2°C முதல் 3°C வரை உயரக்கூடும். ஆனால் மே 14-ஆம் திகதி சில இடங்களில் வெப்பநிலை குறைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் வானிலை சில இடங்களில் மேகமூட்டமாக இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 38°C - 39°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை சுமார் 28°C ஆகவும் இருக்கும்.
மே 13-ஆம் திகதி தென் அந்தமான் கடல் பகுதிகள், தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு தென்மேற்கு பருவமழை முந்தைய காலத்திலேயே நுழையக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நாகப்பட்டினம், காரைக்கால் மற்றும் இராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை லேசான மழை பதிவாகியுள்ளது. இதில் நாகப்பட்டினத்தில் 3.6 செ.மீ மழை பதிவாகி, மாநிலத்தில் அதிகப்படியான மழை அளவை பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Tamil Nadu rain forecast, Heavy rain alert May 2025, IMD weather update Tamil Nadu, Nilgiris Erode Dharmapuri rain, Chennai weather May 13 2025, Tamil Nadu monsoon update, TN districts heavy rainfall, India weather news 2025, Krishnagiri Tirupattur rain alert, IMD rain prediction May