அச்சுறுத்தும் பேரழிவு புயல் - எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்
அரபிக்கடலில் உருவான பைபோர்ஜாய் புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரபிக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு பைபோர்ஜாய் (Biporjay) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,
அரபிக்கடலில் பைபோர்ஜாய் நேற்று இரவு 8.30 மணிக்கு (Biporjay) உருவாகியுள்ளது. இந்த புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை.
பைபோர்ஜாய் என்றால் பேரழிவு என்று அர்த்தமாம். இதனால், ஆபத்து ஏற்பட்டுவிடுமா என்று மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இந்த புயல் கோவாவின் மேற்கு - தென்மேற்கில் 900 கி.மீட்டரிலும், மும்பை தென்மேற்கே 1,100 கி.மீட்டர் தூரத்திலும் நிலை கொண்டுள்ளது.
மணிக்கு சுமார் 5கி.மீட்டர் வேகத்தில் இப்புயல் நகர்ந்து வடக்கு நோக்கி செல்ல இருக்கிறது.
அரபிக் கடல் பகுதியில் 115 கி.மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்றும் இதனால், கடற்கரையோரம் இருக்கும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.