இந்தோனேசியாவில் தொடர் கனமழையால் 38 கிராமங்களில் வெள்ளப்பெருக்கு; ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள Bekasi மாவட்டத்தில் சனிக்கிழமை முதல் பலத்த மழை பெய்துவருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் தலைநகர் Jakarta அருகில் Citarum நதிக்கரை உடைந்ததைத் தொடர்ந்து வெள்ளம் ஏற்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
தேசிய தேடல் மற்றும் மீட்பு முகமை மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவருகினற்னர்.
Bekasi மாவட்டத்தில் நான்கு கிராமங்களிலும், Karawang மாவட்டத்தில் 34 கிராமங்களிலும் 28,000-க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் தணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. அதில் குறைந்தது 4,184 பேர் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இப்பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகள் 100 முதல் 250 சென்டிமீட்டர் தண்ணீரில் மூழ்கியுள்ளன, அதனால் மின்சார வசதியும் துண்டிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய நாட்களில் பருவகால மழை மற்றும் அதிக அலை காரணமாக இந்தோனேசியாவின் பெரும்பகுதி முழுவதும் 10க்கும் மேற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் பரவலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





