பேய் மழை, பெருவெள்ளம்... 300 கடந்த பலி எண்ணிக்கை: மிதக்கும் ஆசிய நாடொன்று
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 300க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் 21 வரை
மீட்புப் பணிகள் மற்றும் தடைபட்ட சாலைகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அவசர நிதி விடுவிக்கப்பட்டதாகவும், ஆகஸ்ட் 21 வரை கனமழை தொடரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேக வெடிப்பு, திடீர் வெள்ளம், மின்னல் தாக்குதல், நிலச்சரிவு மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தது என இந்த ஆண்டின் பருவமழைக் காலத்தில் மிகவும் ஆபத்தான நிகழ்வுகளுக்குக் காரணமாக அமைந்தன.
கைபர் பக்துன்க்வா பிராந்தியத்தில் 307 பேர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டது, மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.
கடந்த வாரத்தில் பெய்த கனமழை, வெள்ளம் மற்றும் மழை தொடர்பான பிற சம்பவங்களால் பாகிஸ்தான் மட்டுமல்ல, அண்டை நாடான இந்தியா மற்றும் நேபாளத்தின் சில பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |