தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் மிககனமழை பெய்யும்- வானிலை மையம் எச்சரிக்கை
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
லட்சத்தீவு பகுதியில் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகுகிறது.
இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று முதல் 10-ம் தேதி வரை பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனால், தமிழகத்தில் இன்று அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
PTI
அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |