தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு 50cm வரை மழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடைவிடாமல் மழை பெய்யலாம் என தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
வானிலை ஆய்வாளர் கூறியதாவது...
'' வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு முழுவதும் 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இதன்படி தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது.
அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை அருகே உள்ள நாலுமுக்கு பகுதியில் அதிகபட்சமாக 19cm மழை பெய்துள்ளது.
இதே போல் ஊத்து எஸ்டேட்டில் 17cm மழையும், காக்காச்சியில் 15cm மழையும், மாஞ்சோலையில் 13.5cm மழையும் பதிவாகியுள்ளது.
தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்து வரும் நிலையில் மழை 50cm அளவிற்கு பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
மாஞ்சோலை மலைப்பகுதியில் 30 - 50cm வரை மழை கொட்டும் எனவும் கூறியுள்ளார். அந்த பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு அவர் எச்சரித்துள்ளார்.
மேலும் தென்காசி, இராமநாதபுரம் மாவட்டங்களிலும் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக அவர் கூறியுள்ளார். எனவே மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |