ரஷ்யாவை புரட்டிபோடும் பனிப்புயல்: தடைப்பட்ட ஹீட்டர் சேவை: மக்கள் அவதி
ரஷ்யாவை கடுமையான பனிப்புயல் தாக்கி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது.
ரஷ்யாவை வாட்டும் பனிப்புயல்
ரஷ்யாவை கடுமையான பனிப்புயல் தாக்கி வரும் நிலையில் தலைநகர் மாஸ்கோவில் வெப்பநிலை உறை நிலைக்கு கீழே சென்றுள்ளது.
இதனால் ரஷ்யாவின் பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிர் தாக்கி வருவதோடு பல பகுதிகள் பனியால் மூடி காணப்படுகிறது.
AFP/Getty
தீவிரமான பனிப்புயல் வீசும் காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ளனர்.
பிரித்தானியாவில் 14 ஆண்டுகள் இல்லாத வரலாறு காணாத பனிப்புயல் மற்றும் கடும் குளிர் இருக்கும் என எச்சரிக்கை விடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஹீட்டர் சேவையில் குளறுபடி
இந்த கடும் குளிருக்கு மத்தியில் அதை மக்கள் சமாளிக்கும் வகையில் வழங்கப்பட்டு வந்த ஹீட்டர் சேவைகள் கடந்த சில நாட்களாக செயல்பாட்டில் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
AFP/Getty
மேலும் மின் கம்பிகளில் அதிகப்படியான பனி மூடியிருப்பதால் பொதுமக்கள் மின் சாதனங்களை பயன்படுத்த முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் மக்களுக்கு ஹீட்டர் சேவைகள் வழங்கிய வந்த ஆலையில் விதிமீறல் செய்த 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
AFP/Getty
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
heavy snowfall, Russia, Moscow, snowstorms, weather, winters