லண்டனிலிருந்து வந்த பெண் நுழைய தடை! பிரித்தானியாவுக்கே திருப்பி அனுப்பிய அமெரிக்கா
குரோஷியா நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு விசா தொடர்பில் எழுந்த சந்தேகத்தால் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டது.
அமெரிக்காவில் நுழைய தடை
Typhon Capital Management என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பணிபுரிபவர் ஜாஸ்மினா மிட்ஜிக் (Jasmina Midzic).
36 வயதாகும் இவர் குரோஷியாவைச் சேர்ந்தவர் ஆவார். முன்னதாக, நியூயார்க் நகரை தளமாகக் கொண்ட JurisTradeயில் ஜாஸ்மினா பணியாற்றியிருக்கிறார்.
இந்த நிலையில், லண்டனில் இருந்து விமானம் மூலம் ஜாஸ்மினா அமெரிக்காவுக்கு பயணித்துள்ளார். ஆனால், குடியேற்ற அதிகாரிகளிடம் அவர் பொய் சொன்னதாக குற்றம்சாட்டப்பட்டதால், அமெரிக்காவில் நுழைய அவருக்கு தடை விதிக்கப்பட்டது.
இதனால் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் 26 மணிநேரம் தடுத்துவைக்கப்பட்ட ஜாஸ்மினா, அனுமதி மறுப்பால் பிரித்தானிய விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டதாக தி அவுட்லெட் மூலம் தெரிய வந்துள்ளது.
அமெரிக்க குடியுரிமை வேண்டாம்
ஜாஸ்மினா சுற்றுலா விசாவில் மாதத்திற்கு 13,000 டொலர்கள் ஊதியம் பெறும் தனது வேலையை, சட்டவிரோதமாக செய்ததாக ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனால் நியூயார்க் போஸ்டின்படி, தான் எந்த தவறும் செய்யவில்லை என்று அவர் கடுமையாக மறுத்தார். மேலும் அவர், "எனது நண்பர்கள் அமெரிக்காவில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களாக உள்ளனர், நான் சட்டத்தை மீற மாட்டேன். இது பல நிலைகளில் எனது உரிமைகளை கடுமையாக மீறுகிறது.
நான் ஒரு வெள்ளை ஐரோப்பியன் மற்றும் நான் ஹெட்ஜ் ஃபண்டிற்கு வேலை செய்கிறேன் என்பதால் அவர்கள் கேட்கவில்லை. எனக்கு அமெரிக்க குடியுரிமை வேண்டாம் என்றதால் அவர்கள் மிகவும் கோபமடைந்தனர்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |