ஆற்றில் விழுந்த தீயணைப்பு ஹெலிகாப்டர்: விபத்தில் சடலமாக மீட்கப்பட்ட நால்வர்!
போர்ச்சுகலின் வடக்குப் பகுதியில் நிகழ்ந்த ஒரு பயங்கர விபத்தில் தீயணைப்பு பணியிலிருந்து திரும்பிய ஹெலிகாப்டர் டுரோ ஆற்றில் விழுந்ததில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்தனர்.
விபத்திற்குள்ளான ஹெலிகாப்டர்
போர்ச்சுகலின்(Portugal) வடக்குப் பகுதியில் லமேகோ(Lamego) நகருக்கு அருகில் தீயணைப்பு பணியிலிருந்து திரும்பிய ஹெலிகாப்டர் டுரோ (Douro) ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளனர், ஹெலிகாப்டரில் இருந்து இரண்டு உடல்கள் மீட்கப்பட்டன, மேலும் இரண்டு உடல்கள் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதியில் கண்டறியப்பட்டன.
இச்சம்பவத்தின் போது ஹெலிகாப்டரில் இருந்த நபர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
மீட்கப்பட்ட விமானி
ஹெலிகாப்டரின் விமானி அருகிலிருந்த ஒரு சுற்றுலா படகு மூலம் மீட்கப்பட்டு கால்களில் காயத்துடன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
விபத்து நிகழ்ந்த போது ஹெலிகாப்டரில் அவசர பாதுகாப்பு மற்றும் நிவாரண அலகுக்கு சொந்தமான ஐந்து நிபுணர்கள் பயணித்துக் கொண்டிருந்த குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவில் முகத்தில் உடைந்த கண்ணாடியை கொண்டு பலமுறை குத்திய நபர்: சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளம் பெண்
காணாமல் போன நபரை அதிகாரிகள் ஹெலிகாப்டரின் சுற்றியுள்ள ஆற்றிலும் கரையோரங்களிலும் நீருக்கடியில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் விபத்திற்கான காரணத்தையும் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |