இந்திய முப்படை தளபதியுடன் சேர்ந்து உயிரிழந்த வீரரின் மனைவிக்கு வழங்கப்பட்ட காப்பீட்டு பணம்! எவ்வளவு?
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ வீரர் ஜிதேந்திர குமார் உயிரிழந்த நிலையில் அவர் மனைவிக்கு காப்பீட்டு தொகை பணம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 8ஆம் திகதி தமிழகத்தின் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்தியாவின் முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் Lance Naik ஜிதேந்திர குமாரும் ஒருவர். இந்த நிலையில் ஜிதேந்திர குமாரின் இன்சுரன்ஸ் காப்பீட்டு பணமான ரூ Rs 48.40 லட்சம் அவர் மனைவி சுனிதாவிடம் வழங்கப்பட்டுள்லது.
எஸ்பிஐ வங்கி சார்பில் அதன் உயர் அதிகாரிகள் சுனிதாவை நேரில் சந்தித்து கணவர் இறப்பிற்கு ஆறுதல் கூறி காசோலையை வழங்கினார்கள்.
அதன்படி மொத்தத் தொகையில், பாதுகாப்புச் சம்பளத் தொகுப்பின் கீழ் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட accidental death benefit கணக்கில் ரூ. 30 லட்சமும், எஸ்பிஐ ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகளின் தீர்வுத் தொகையாக ரூ. 18.40 லட்சமும் வழங்கப்பட்டது.
இந்த பணமானது நிச்சயம் சுனிதாவின் எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.