வீட்டு தோட்டத்தில் வந்து விழுந்த ஹெலிகாப்டர்; அதிசயமாக உயிர் தப்பிய பயணிகள்
பிரித்தானியாவில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் அதிர்ஷ்டவசமாக நான்கு பேரும் உயிர்தப்பியுள்ளார்.
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டுஷையரில் உள்ள ஒரு கிராமத்தின் பின்புற தோட்டத்தில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. ஆனால், அதிலிருந்து நான்கு பேர் அதிசயமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.
உள்ளூர் நேரப்படி நேற்று (சனிக்கிழமை) மதியம் 1 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது.
ஆக்ஸ்போர்டுஷையர் மற்றும் பக்கிங்ஹாம்ஷயர் ஆகிய இடங்களில் இருந்து ஏராளமான தீயணைப்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் உடனடியாக அலாரம் எழுப்பப்பட்டது.
இதையும் படிங்க: விளாடிமிர் புடினின் விதி 3 ஆண்டுகள் தான்! ரஷ்ய உளவாளி பரபரப்பு தகவல்
ஹெலிகாப்டர் கீழே விழுந்ததில் ஆக்ஸ்போர்டுஷையரில் உள்ள மூன்று தீயணைப்பு நிலையங்களில் இருந்து பணியாளர்கள் உதவிக்கு வரவழைக்கப்பட்டனர்.
இன்று, ஹாம்ப்ஷயரில் உள்ள ஃபார்ன்பரோவை தளமாகக் கொண்ட விமான விபத்து புலனாய்வுப் பிரிவின் நிபுணர்கள், விமானம் வானத்தில் இருந்து கீழே விழுந்ததற்கான தடயங்களைத் தேடிக்கொண்டிருந்தனர்.
விபத்துக்குள்ளானதால் ஹெலிகாப்டரின் சில பகுதிகள் உடைந்து 100 மீட்டர் பரப்பளவில் பரவியது. அதிர்ஷ்டவசமாக, ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் தீப்பிடிக்காததால், விமானி உட்பட நான்கு பயணிகளும் தீக்காயம் ஏதுமின்றி தப்பினர்.
ஹெலிகாப்டர் எங்கு பறந்து கொண்டிருந்தது, யாருக்கு சொந்தமானது என்பது தெரியவில்லை. அது இறங்கிய பகுதியில் பல புல்வெளி விமான ஓடுதளங்களும் ஆக்ஸ்போர்டு விமான நிலையமும் உள்ளன.
பயணிகளின் விவரங்கள் எதுவும் காவல்துறையால் வெளியிடப்படவில்லை.
இதையும் படிங்க: இமானுவேல் மக்ரோன், ஓலாஃப் ஷோல்ஸை எச்சரிக்கும் விளாடிமிர் புடின்!