புடின் இன்னும் 3 ஆண்டுகள் தான் உயிரோடு இருப்பார்! ரஷ்ய உளவாளி பரபரப்பு தகவல்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் தான் உயிருடன் இருப்பார் என உளவாளி ஒருவர் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு புற்றுநோயின் தீவிரம் அதிகரித்து வருவதால், அவர் அதிகபட்சம் இன்னும் 3 ஆண்டுகள் தான் வாழலாம் என ரஷ்யாவின் FSB உளவாளி Boris Karpichkov கூறியுள்ளார்.
மேலும், புடின் தனது பார்வையை இழந்துவருவதாகவும் அவர் கூறினார்.
தனது குறையை வெளிக்காட்டினால் பலவீனத்தை ஒப்புக்கொள்வது போல் இருக்கும் என்ற பயத்தில் அவர் அணிவதை தவிர்த்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: 'பிண நீரை' விற்று பணம் சம்பாதிக்கும் பெண்! அதிசயமாக ஒன்லைனில் வாங்கும் மக்கள்
புடினின் உடல்நிலை மோசமடைந்து வருகிறது என்ற செய்தி கிரெம்ளினின் உள்வட்டத்தில் இருந்து தொடர்ந்து கசிந்து வருகிறது.
இம்மாத தொடக்கத்தில் புட்டினுக்கு வெற்றிகரமாக புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை நடந்து முடிந்ததாகவும், அதனைத் தொடர்ந்து அவர் மருத்துவர்களின் அறிவுரைகளின்படி மிகவும் அவசியமான சிகிச்சைகளை பெற்றுவருவதாக General SVR எனும் Telegram சேனலில் செய்தி வெளியானது.
இதையும் படிங்க: இமானுவேல் மக்ரோன், ஓலாஃப் ஷோல்ஸை எச்சரிக்கும் விளாடிமிர் புடின்!
மேலும் பார்க்கின்சன் நோய் இருப்பதை மேலும் நிரூபிக்கும் விதமாக, பெலாரஸ் நாட்டின் அதிபர் Alexander Lukashenko-உடனான சந்திப்பில், புடின் தனது இடது காலை சுழற்றிக்கொண்டே இருந்தார் என்றும் செய்திகள் வெளியாயின. மேலும் அது தொடர்பான விடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலானது.
இதையும் படிங்க: வாரத்திற்கு 4 நாட்களுக்கு மட்டுமே வேலை! பிரித்தானிய நிறுவனங்கள் சோதனை