U19 உலகக்கிண்ணம்: 5 விக்கெட்டுகளை சாய்த்த இந்திய வீரர்..ஸ்டம்ப் பறந்த வீடியோ
அமெரிக்க U19 அணிக்கு எதிரான உலகக்கிண்ணப் போட்டியில், இந்திய U19 அணி வீரர் ஹெனில் பட்டேல் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
U19 உலகக்கிண்ணம்
இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகளுக்கு இடையிலான U19 உலகக்கிண்ணப் போட்டி புலவாயோவில் நடந்து வருகிறது.
This is how Henil Patel brought up the first 5-wicket haul of the 2026 #U19WorldCup pic.twitter.com/rO8nwoyw7D https://t.co/4RZF8MJU1p
— Cricbuzz (@cricbuzz) January 15, 2026
நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி அமெரிக்கா முதலில் துடுப்பாடியது.
இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஹெனில் பட்டேலின் மிரட்டலான பந்துவீச்சில் அமெரிக்க அணியின் விக்கெட்டுகள் சரிந்தன.
இதனால் அமெரிக்க அணி 35.2 ஓவர்களில் 107 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக நிதிஷ் சுதினி 36 ஓட்டங்கள் எடுத்தார்.
அபாரமாக பந்துவீசிய ஹெனில் பட்டேல் 16 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றினார்.
@cricbuzz/X
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |