இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதி பலி! வெளியான தகவல்
சிரியாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி உட்பட இருவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
41,000 பேர் பலி
காஸா முனையில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உட்பட 41,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த சண்டைக்கு இடையே லெபனான் நாட்டில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பும், ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி அமைப்பும் ஹமாஸுக்கு ஆதரவாக செயல்படுகின்றன.
அதேபோல் சிரியா மற்றும் ஈராக்கில் செயல்பட்டு வரும் குழுக்களும் ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.
முக்கிய தளபதி
இந்நிலையில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், சாலையில் சென்றுகொண்டிருந்த கார் மீது ஏவுகணை விழுந்தது.
இதில் காரில் பயணித்த ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி உட்பட 2 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பலியான நபர் ஈரானில் இருந்து லெபனானுக்கு ஆயுதங்களை கடத்தி வரும் பிரிவின் தளபதியாக செயல்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |