இஸ்ரேலின் பலவீனத்தை அறிந்துகொண்ட ஹிஸ்புல்லா படைகள்.. எழுந்த அச்சம்
இஸ்ரேலின் கொண்டாடப்படும் வான்பாதுகாப்பு அமைப்பை முறியடிக்கும் வழியை ஹிஸ்புல்லா அறிந்துகொண்டிருக்கலாம் என்ற அச்சம் பரவலாக எழுந்துள்ளது.
ஹிஸ்புல்லாவின் ட்ரோன்
ஞாயிறன்று ஹிஸ்புல்லா படைகள் நடத்திய உக்கிரமான ட்ரோன் தாக்குதலில் நான்கு இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் ஹிஸ்புல்லாவின் ட்ரோன் தாக்குதலை இஸ்ரேலின் வான்பாதுகாப்பு அமைப்பு ஏன் எதிர்கொள்ளவில்லை என்ற கேள்வி ராணுவ உயரதிகாரிகள் வட்டத்தில் எழுந்துள்ளது.
இஸ்ரேல் ராணுவத்தின் கோலானி படையணி மீது திட்டமிட்ட ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் லெபனான் மீது தரௌவழி தாக்குதலை இஸ்ரேல் நடத்தத் துவங்கியதன் பின்னர் ஹிஸ்புல்லா படைகள் முன்னெடுக்கும் மிக உக்கிரமான தாக்குதல் இதுவென்றே கூறப்படுகிறது.
பொதுவாக இஸ்ரேலின் வான்பாதுகாப்பு அமைப்பானது உலகத்தரம் என்றே கொண்டாடபப்ட்டு வருகிறது. ஆனால் தற்போது ஹிஸ்புல்லா படைகளின் ட்ரோன் தாக்குதலை அந்த அமைப்பு ஏன் முறியடிக்கவில்லை என்பதை அறிய இஸ்ரேலின் நிபுணர்கள் குழு போராடி வருகிறது.
போதுமானதாக இல்லை
மட்டுமின்றி, கோலான் படையணியை எச்சரிக்கும் வகையில் ஏன் மணி ஓலிக்கவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், ஒரே நேரத்தில் பல்வேறு தரப்பில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டால் இஸ்ரேலின் வான்பாதுகாப்பு அமைப்பு முடங்கிவிடுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.
பொதுவாக ட்ரோன் தாக்குதல்களுக்கு இஸ்ரேலின் வான்பாதுகாப்பு அமைப்பு போதுமானதாக இல்லை என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. ஏவுகணை என்றால் மட்டுமே அந்த அமைப்பு துரிதமாக செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.
ஹிஸ்புல்லா அனுப்பியுள்ள ட்ரோன்கள் மணிக்கு 370 கி.மீ வேகத்தில் பறக்கக்கூடியவை. 120 கி.மீ தொலைவுக்கு தாக்குதல் நடத்தக் கூடியவை. 40 கிலோ அளவுக்கு வெடிப்பொருட்களை கொண்டுசெல்லக் கூடியவை,
அத்துடன் 3,000 மீற்றர்கள் வரையில் பறக்கக் கூடியவை. ஹிஸ்புல்லா அனுப்பிய ஒரே ஒரு ட்ரோன் மட்டுமே வீழ்த்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 61 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர். அதில்,7 பேர்கள் பலத்த காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |