கொசு விரட்டும் கருவியில் ரகசிய கேமரா! தம்பதியை மிரட்டிய லாட்ஜ் ஊழியர் கைது
கொசு விரட்டும் கருவியில் ரகசிய கேமரா பொருத்தி தம்பதிகளிடம் பணம் கேட்டு மிரட்டிய லாட்ஜ் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லாட்ஜில் ரகசிய கேமரா
இந்திய மாநிலம் கேரளாவில் உள்ள திரூரில் பிரபலமான லாட்ஜ் ஒன்று இயங்கி வருகிறது. இந்த லாட்ஜில் வரவேற்பு ஊழியராக அப்துல் முனீர் என்பவர் இருந்து வருகிறார்.
அங்கு, கடந்த மாதம் திருமணமான இளம் தம்பதியினர் ஒருவர் ஆன்லைன் மூலமாக ரூம் ஒன்றை புக் செய்துள்ளனர். அப்போது, அந்த ஊழியர் கொசு விரட்டும் கருவியில் ரகசிய கேமரா ஒன்றை பொறுத்தியுள்ளார்.
பின்பு ஊழியர், அந்த தம்பதியினரின் அந்தரங்க புகைப்படத்தைக் காட்டி இணையத்தில் பதிவேற்றம் செய்வதாக கூறி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். மேலும், தம்பதியினரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு அந்தரங்க புகைப்படம் மற்றும் வீடியோக்களை அனுப்பி ரூ.1.45 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
பொலிசில் சிக்கிய ஊழியர்
இது தொடர்பாக, திரூர் காவல் நிலையத்தில் தம்பதியினர் புகார் அளித்தனர். பின்பு, பொலிசார் கூறியபடி ஊழியருக்கு ரூ. 2,000 பணத்தை தம்பதியினர் அனுப்பினார். மீதம் உள்ள பணத்தை நகையாக தருவதாக கூறி அப்துல் முனீரை வரவழைத்தனர்.
இதனையடுத்து, நகையை வாங்க வந்த அப்துல் முனீர் பொலிசாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த லேப்டாப் மற்றும் கொசு விரட்டும் கருவியில் இருந்த கேமரா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பின்னர், அப்துல் முனீரிடம் நடத்திய விசாரணையில்,"இது போல பல தம்பதிகளிடம் வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்துள்ளது தெரியவந்துள்ளது". மேலும், இவர் மீது வழக்குப்பதிவு செய்த பொலிசார் சிறையில் அடைத்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |