தொடையில் உள்ள அதிகப்படியான தசையை குறைக்கனுமா? இந்த பயிற்சியை மறக்கமால் செய்து வாங்க
உடல் எடை அதிகரிப்பு என்பது இப்போது அதிகமாகி கொண்டிருக்கிறது.
குறிப்பாக நாம் அதிகமாக எடுத்துக்கொள்ளும் கொழுப்பு நிறைந்த உணவுகளால் அந்த கொழுப்பானது நாளடைவில் தொடை பகுதியில் சேர்ந்து தொடையில் அதிகப்படியான சதை உருவாக காரணமாகிறது.
தொடையில் உள்ள சதையை குறைக்க கவனம் செலுத்த வேண்டும்.
அதற்கு ஒரு சில உடற்பயிற்சிகள் உதவுகின்றன. தற்போது அதில் ஒன்றை எப்படி செய்யலாம் என்பதை இங்கே பார்ப்போம்.
செய்முறை
- இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் கால்களை சேர்த்து வைத்து நேராக நிற்கவும். கைகளை மேல் நோக்கி தூக்கியபடி கும்பிட்ட நிலையில் இருக்கவும்.
- கும்பிட்ட நிலையில் முன்புறமாக சற்று குனியவும். கால் முட்டியை சற்று மடக்கவும். கால் பாத முன்விரல்களில் உங்கள் எடை முழுவதும் இருக்கும்படி சற்று குனிந்த நிலையில் நிற்கவும்
- இந்த நிலையில் 20 விநாடிகள் இருந்தபின்னர் பழைய நிலைக்கு வரவும்.
- முதல் வாரம் முழுவதும் 3 முறை செய்தால் போதுமானது. பின்னர் படிப்படியாக எண்ணிகையின் அளவை அதிகரித்து 5 முதல் 7 முறை செய்ய வேண்டும்.
- இந்த பயிற்சி செய்யும் போது உங்கள் கால் தொடைப்பகுதியில் சதைப்பகுதி இழுக்கப்படுவதை போன்ற உணர்வு ஏற்படுவதை காணலாம்..
பலன்
இந்த பயிற்சியை தினமும் 20 நிமிடம் செய்தால் போதுமானது. 1 மாதத்தில் உங்கள் தொடைப்பகுதியில் உள்ள சதையில் அளவு குறைந்திருப்பதை காணலாம்.