இந்திய ரயில்வேயின் அதிக வருவாய் ஈட்டும் ரயில் நிலையம்.., எது தெரியுமா?
பொதுவாக இந்திய ரயில்வே பயணிகளின் பயண தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்தியாவில் மொத்தம் 7349 ரயில் நிலையங்கள் உள்ளன. அதில் தினமும் சுமார் ரயிலில் 2.5 கோடி மக்கள் பயணம் செய்கின்றன.
இந்நிலையில், இந்திய ரயில்வேயின் அதிக வருவாய் ஈட்டும் ரயில் நிலையம் எது என்பது பலருக்கும் தெரியாத ஒரு விடயம்.
இந்திய ரயில்வேயானது, ஆண்டுதோறும் அதிக வருமானத்தை ஈட்டும் முக்கியமான 21 ரயில் நிலையங்களை இயக்கி வருகிறது.
ரயில் வழித்தடத்தில் இந்திய ரயில்வே, இந்தியா முழுவதும் 92,952 கி.மீ. நீள ரயில்வே வழித்தடத்துடன் நான்காவது இடத்தில் உள்ளது.
70,000 கிலோ மீட்டருக்கும் மேல் நீளமான இந்தியாவின் ரயில் நெட்வொர்க்கில் தினசரி 13,000 பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சரக்கு ரயில்களுடன் சேர்த்தால், மொத்த ரயில்களின் எண்ணிக்கை 23,000 ஆகும்.
இந்நிலையில், அதிக வருவாய் ஈட்டும் இந்தியாவின் முதல் ஐந்து ரயில் நிலையங்களின் பட்டியல் குறித்து பார்க்கலாம்.
1. புது டெல்லி நிலையம் (டெல்லி) ரூ.3,337 கோடி
2. சென்னை சென்ட்ரல் (தமிழ்நாடு) ரூ.1,299 கோடி
3. ஹைதராபாத் (தெலங்கானா) ரூ.1,276 கோடி
4. ஹவுரா (மேற்கு வங்கம்) ரூ.1,276 கோடி
5. ஹஸ்ரத் நிஜாமுதீன் (டெல்லி) ரூ.1,227 கோடி
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |