ஹிஜாப் சர்ச்சை! அந்த வார்டில் பாஜக வேட்பாளர் பெற்ற ஓட்டுகள் எத்தனை தெரியுமா?
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது ஹிஜாப் சர்ச்சை எழுந்த வார்டில் வெறும் 10 ஓட்டுகள் மட்டுமே பெற்றுள்ளார் பாஜக வேட்பாளர்.
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு கடந்த 19ம் தேதி வாக்குபதிவு நடைபெற்றது.
இதில் பதிவான வாக்குகள் இன்று காலையில் 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தேர்தலின் போது மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி 8 வார்டில் ஒரு வாக்குசாவடியில் ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய பெண்ணுக்கு பாஜக முகவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால் பரபரப்பு நிலவிய நிலையில், பாஜக முகவர் அந்த மையத்திலிருந்து வெளியேற்றப்பட்டார், மேலும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அந்த வார்டில் பாஜகவுக்கு 10 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன, திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.