Mauritania-வில் விமானக் கடத்தல்! வெடிக்க வைக்க போவதாக மர்ம நபர் மிரட்டல் விட்டதால் பரபரப்பு
ஆப்பிரிக்கா நாடான Mauritania-வில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவன் விமானத்தை கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் Nouakchott-வில் உள்ள விமான நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்த Mauritania ஏர்லைன்ஸ்-க்கு சொந்தமான விமானத்திற்குள் மர்ம நபர் நுழைந்துள்ளார்.
பின் விமான போக்குவரத்து ஆணையத்தை தொடர்புக் கொண்ட மர்ம நபர், பாதுகாப்பு படையினர் அருகில் வந்தால் விமானத்தை வெடிக்க வைக்கபோவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
தனக்கு விமான உரிமம் வழங்குமாறு மர்ம நபர் விமான அதிகாரிகளிடம் கூறியதாக அந்நாட்டின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிர்ஷ்டவசமாக விமானத்தில் பயணிகள் யாரும் இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.
விமானம் கடத்தப்பட்டதை தொடர்ந்து விமானநிலையத்தில் பாதுகாப்பு படையினர் குவிந்துள்ளனர். விமானத்தை கடத்திய நபர் அமெரிக்க குடிமகன் என கூறப்பட்டது.
இதனையடுத்து, அதிகாரிகள் மர்ம நபரை கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், கைது செய்யப்பட்ட நபர் குறித்து மேலதிக தகவல் ஏதும் வெளியாகவில்லை.
