இந்திய நகரம் ஒன்றில் சைவ உணவுகள் மட்டும் விற்கும் KFC - என்ன காரணம்?
காசியாபாத்தில் கேஎஃப்சி உணவகம் தற்காலிகமாக சைவ உணவுகள் மட்டுமே விற்பனை செய்து வருகிறது.
கன்வர் யாத்திரை
உத்தரப் பிரதேசம் போன்ற வட இந்திய மாநிலங்களில், ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை கன்வர் யாத்திரையை(kanwar yatra) இந்துக்கள் மேற்கொள்வது வழக்கம்.
இந்த ஆண்டு கடந்த ஜூலை 11ஆம் திகதி தொடங்கி ஆகஸ்ட் 8 ஆம் திகதி வரை கன்வர் யாத்திரை நடைபெற உள்ளது.
கன்வர் யாத்திரை நடைபெறும் வழிகளில் இறைச்சி விற்பனை செய்யக்கூடாது என்றும், அனைத்து உணவகங்களிலும் உரிமையாளர்களின் பெயர்களை வெளியில் தெரியும்படி பலகைகள் வைக்க வேண்டும் என்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டதற்கு பெரும் எதிர்ப்பு எழுந்தது.
கேஎஃப்சியில் சைவ உணவுகள் மட்டுமே
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில்(Ghaziabad) உள்ள கே.எஃப்.சி கடை இறைச்சி வழங்குவதை கண்டித்து, இந்து ரக்ஷா தளம் என்ற அமைப்பை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
In Ghaziabad's Vasundhara area, members of Hindu Raksha Dal forcibly closed a KFC outlet during Sawan, threatened the staff, and created tension in the locality.
— Punny (@PunnyBhaiya) July 18, 2025
This is the ground reality of law and order in Uttar Pradesh.pic.twitter.com/3dYlKO7OMD
இதனை தொடர்ந்து காசியாபாத்தில் கே.எஃப்.சியில் தற்காலிகமாக சைவ உணவுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
KFC 147 நாடுகளில், 29,000க்கும் மேற்பட்ட கிளைகளை வைத்துள்ள சிக்கன் உணவுகளை விற்பனை செய்யும் பிரபல நிறுவனமாகும்.
இந்த மிரட்டல் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்காது எனவும் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |