தாலிபான்கள் என்னை கொன்றாலும் பரவாயில்லை.. அங்கிருக்கும் இந்து அர்ச்சகரின் துணிச்சல் முடிவு!
ஆப்கானிஸ்தானில் இருந்து பலரும் வெளியேறி வரும் நிலையில் இந்து கோயில் அர்ச்சகர் ஒருவர் தாலிபான்கள் என்னை கொன்றாலும் இந்த இடத்தைவிட்டு நான் வெளியேற போவதில்லை என்று துணிச்சலாக கூறியுள்ளார்.
அமெரிக்க படைகள் ஆப்கனில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து அந்நாட்டை தாலிபான்கள் கைப்பற்ற தொடங்கியுள்ளது. இதனால் உயிர் தப்பித்தால் போதும் என்று நினைத்து பலரும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.
இந்நிலையில் அந்நாட்டில் உள்ள ஹிந்து கோயிலின் அர்ச்சகர் ராஜேஷ் குமார் கூறியது, தனது முன்னோர்கள் பல நூற்றாண்டுகள் இந்த கோவிலில் சேவையாற்றியுள்ளனர்.
அதனால் உயிரே போனாலும் இந்த இடத்தை விட்டு வெளியேற மாட்டேன். அதனால் என்னை தாலிபான்கள் கொன்றாலும் சேவையாகவே தான் கருதுவேன் என தெரிவித்துள்ளார். தங்களிடம் வரும்படி பக்தர்கள் கூறினாலும் எனக்கு அதில் விருப்பம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் மத சிறுபான்மையினராக உள்ள இந்துக்களும் சீக்கியர்களும் இந்தியாவுக்கு வரலாம் என்றும் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.