பாகிஸ்தானில் இந்து பெண்ணுக்கு நேர்ந்த நிலை! கடத்த முயன்று துப்பாக்கியால் சுட்டுக்கொலை
பாகிஸ்தானில் 18 வயதான இந்து பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சக்கர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் சக்கர் மாவட்டத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்ட பெண்ணின் பெயர் பூஜா குமாரி. அவரது நெருங்கிய உறவினரான அஜய் குமார் பிபிசியிடம், "இந்த சம்பவத்திற்குப் பிறகு, பூஜா எதிர்ப்பின் அடையாளமாக மாறிவிட்டார். இப்போது எங்கள் இதயங்களில் அவரைப்பற்றிய மதிப்பு உயர்ந்துவிட்டது" என்று கூறினார்.
சம்பவத்தின்போது, மூன்று பேர் தனது மகளைக் கடத்தும் முயற்சியில் வீட்டிற்குள் நுழைந்ததாகவும், ஆனால் எதிர்த்தபோது அவர்கள் பூஜாவைக் கொன்றதாகவும் பூஜா குமாரியின் தந்தை சாஹிப் ஆதி குற்றம் சாட்டியுள்ளார்.
காவல்துறை உயர் மட்டத்தில் இந்த விஷயத்தை விசாரித்து வருகிறது. மீதமுள்ள குற்றம் சாட்டப்பட்டவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தும் ரஷ்யா! சிக்கிய ஆதாரம்
இந்த சம்பவம் உள்ளூர் இந்துக்களை கோபப்படுத்தியது. கூடவே அப்பகுதி முஸ்லிம்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பூஜாவின் வீட்டிற்கு திரண்டு வந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்று பூஜாவின் உறவினர் அஜய் குமார் கூறினார்.
Courtesy: BBCNewsTamil