கோடிக்கணக்கான ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டவர்களுக்கு மொபைலில் வந்த எச்சரிக்கை
Terrifying hoax emergency alerts have been sent to millions of civilians across Russia and Ukraine: கோடிக்கணக்கான ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டவர்களுக்கு அச்சுறுத்தும் வகையிலான போலி அவசர எச்சரிக்கை செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன.
ரஷ்யாவின் அவசர எச்சரிக்கை அமைப்பு ஹேக்கர்களின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக அஞ்சப்படுகிறது.
மொபைலில் வந்த எச்சரிக்கை
கோடிக்கணக்கான ரஷ்யர்களுக்கு, அணு ஆயுத தாக்குதல் தொடர்பில் அவசர எச்சரிக்கை செய்திகள் வந்ததால் பெரும் பரபரப்பு உருவானது.

மூன்று வாரங்களுக்கான உணவு முதலான அத்தியாவசியப் பொருட்களை சேமித்துவைத்துக்கொள்ளுமாறும், தரைத்தளத்திலுள்ள பாதுகாப்பான இடங்களில் பதுங்கிக்கொள்ளுமாறும் அந்த செய்திகள் கூறின.
அதுவும், இந்த செய்திகள் அரசின் அதிகாரப்பூர்வ சேனல்கள் மூலம் வந்ததால் மக்கள் பதற்றமடைந்தார்கள்.
விடயம் என்னவென்றால், ரஷ்யர்களுக்கு இப்படி அவசர எச்சரிக்கைகள் வருவதற்கு சில மணி நேரம் முன், உக்ரைனின் வான் எச்சரிக்கை அமைப்பு ஹேக் செய்யப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, உக்ரைனியர்களுக்கும் அணு ஆயுதம் மற்றும் ரசாயன தாக்குதல் மூலம் ஏற்படும் கதிரியக்க பாதிப்பு தொடர்பில் எச்சரிக்கை செய்திகள் வந்துள்ளன.
என்றாலும், உக்ரைன் அதிகாரிகள் உடனடியாக இது ஹேக்கர்களின் வேலை என்பதை உறுதிசெய்துள்ளார்கள்.
ரஷ்யாவைப் பொருத்தவரை, தனது அதிகாரப்பூர்வ எச்சரிக்கை அமைப்பை சீர் செய்யும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் இறங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.