ருத்ர தாண்டவமாடிய ஹோல்டர்! 53 ஓட்டங்கள் விளாசல்..கடைசி பந்தில் விக்கெட் எடுத்து வெற்றி
கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் செயின்ட் கிட்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் பார்படாஸ் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது.
சிக்ஸர்களை பறக்கவிட்ட ஹோல்டர்
கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்த கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் செயின்ட் கிட்ஸ் அன்ட் நேவிஸ் பேட்ரியோட்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய செயின்ட் கிட்ஸ் அணியில் முகமது ரிஸ்வான் (Mohammed Rizwan) 39 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வீரர்கள் சொதப்ப, அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் (Jason Holder) சிக்ஸர்களை பறக்கவிட்டு ருத்ர தாண்டவம் ஆடினார்.
போஷ் 3 விக்கெட்டுகள்
இதன்மூலம் செயின்ட் கிட்ஸ் அணி 150 ஓட்டங்கள் குவித்து. ஹோல்டர் ஆட்டமிழக்காமல் 30 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 53 ஓட்டங்கள் விளாசினார்.
ஈத்தன் போஷ் 3 விக்கெட்டுகளும், கிறிஸ் கிரீன் மற்றும் டேனியல் சாம்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய பார்படாஸ் ராயல்ஸ் அணியில் டி காக் 22 ஓட்டங்களும், பிரண்டன் கிங் 29 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து ரூதர்போர்டு 25 (20) ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆக, அணித்தலைவர் பவல் 16 ஓட்டங்களில் வெளியேறினார்.
கடைசி பந்தில் வெற்றி
மறுபுறம் வான் டெர் டுசென் வெற்றிக்காக போராடினார். பார்படாஸ் வெற்றிக்கு 14 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி ஓவரை ஹோல்டர் வீசினார்.
டுசென் அந்த ஓவரில் ஒரு சிக்ஸர் விளாச, கடைசி பந்தை எதிர்கொண்ட டேனியல் சாம்ஸ் lbw முறையில் ஆட்டமிழந்தார்.
இதன்மூலம் 1 ரன் வித்தியாசத்தில் செயின்ட் கிட்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 53 ஓட்டங்களுடன், 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய ஹோல்டர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |