நரைமுடியை உடனடியாக கருப்பாக்க உதவும் டை.., எப்படி தயாரிப்பது?
பொதுவாக முடி உதிர்தல், வலுவிழந்த முடி, வறண்ட முடி, பொடுகு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் அனைவருக்கும் இருக்கிறது.
அதேபோல், இன்றைய காலத்தில் இளைஞர்கள் பெரும்பாலும் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று நரைமுடி.
அந்தவகையில், நரைமுடியை உடனடியாக கருப்பாக்க உதவும் இயற்கை டையை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கறிவேப்பிலை- 2 கைப்பிடி
- வெந்தயம்- 2 ஸ்பூன்
- கருஞ்சீரகம்- 2 ஸ்பூன்
- கடுகு- 4 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் கறிவேப்பிலை, வெந்தயம் மற்றும் கருஞ்சீரகம் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு இரும்பு வாணலில் கடுகு சேர்த்து நன்கு பொரிந்து வரும்வரை வறுத்துக்கொள்ளவும்.
அடுத்து அதில் அரைத்த கலவை சேர்த்து நன்கு கருப்பாகி வரும்வரை வறுத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து இவற்றை ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் ஒரு கிண்ணத்தில் அரைத்த பொடி மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் அப்படியே விட்டுவிடவும்.
இறுதியாக லேசான ஷாம்பு கொண்டு வெதுவெதுப்பான தண்ணீரில் கூந்தலை அலசிக்கொள்ளலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |