முழங்கால் வரை முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் கருப்பு எண்ணெய்: எப்படி தயாரிப்பது?
பொதுவாக ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் முடி உதிர்வு.
மேலும், இன்றைய காலத்தில் இளைஞர்களுக்கு கூட முடி நரைக்க தொடங்குகிறது.
அந்தவகையில், கட்டுக்கடங்காத கூந்தல் வளர்ச்சி முதல் நரைமுடியை கருப்பாக்குவது வரை இந்த ஒரு கருஞ்சீரக எண்ணெய் போதும்.
முடிக்கு ஊட்டச்சத்து வழங்கி முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் கருஞ்சீரக எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்- 2 கப்
- கருஞ்சீரகம்- 2 ஸ்பூன்
- வெந்தயம்- 2 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் கருஞ்சீரகம் மற்றும் வெந்தயத்தை நன்கு உலரவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் உலரவைத்த வெந்தயம் மற்றும் கருஞ்சீரகத்தை நன்கு அரைத்து பொடியாக்கி எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு இரும்பு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து சூடுபடுத்திக்கொள்ளவும்.
இதற்கடுத்து அரைத்து வைத்துள்ள பொடியை தேங்காய் எண்ணெயில் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
பின்னர் எண்ணெய் நன்கு நிறம் மாறி வந்ததும் அடுப்பை அனைத்து எண்ணெயை ஆறவைக்கவும்.
இறுதியாக கருஞ்சீரக எண்ணெயை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளவும்.
இந்த எண்ணெயை தலைமுடியின் உச்சந்தலை முதல் முடியின் நுனி வரை நன்கு தடவி ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும்.
பின் மென்மையான ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசிக்கொள்ளலாம். இந்த எண்ணெயை வாரத்திற்கு 2 முறை தொடர்ந்து பயன்படுத்தி வர ,முடி நன்கு வளரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |