Moong Dal Pizza: பாசிப்பருப்பு இருந்தால் உடனே Pizza செய்து பாருங்க
Healthy Food Recipes
Pizza
By Kirthiga
பொதுவாகவே அனைவருக்கும் பீட்சா என்பது மிகவும் பிடித்த உணவாகும். இது உலகின் எந்தப் பகுதியிலும் இருந்தாலும் மக்கள் வாங்கி சாப்பிடுகிறார்கள்.
ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களைப் பற்றி பலர் அறிந்திருக்கிறார்கள், இதன் காரணமாக பீட்சாவை சாப்பிடுவதை பலரும் தவிர்க்கின்றனர்.
ஆனால், முற்றிலும் ஆரோக்கியமான பீட்சாவை நீங்கள் வீட்டில் தயார் செய்து சாப்பிடலாம் என்று கூறினால் நம்புவீர்களா?
ஆம். நீங்கள் யோசிப்பது சரி தான். நீங்கள் இனி வீட்டிலேயே எந்தவொரு சிரமமும் இல்லாமல் ஆரோக்கியமாக பாசிப்பருப்பை வைத்து பீட்சா செய்யலாம்.
தேவையான பொருட்கள்
- பாசிப்பருப்பு - 1கப்
- வெங்காயம்
- குடை மிளகாய்
- சீஸ்
- ஸ்வீட் சோளம்
- தண்ணீர்
- பேக்கிங் சோடா
- பேக்கிங் பவுடர்
- எலுமிச்சை சாறு
- ரவை
- உப்பு
- மிளகாய் செதில்கள்
- மிளகு தூள்
- எண்ணெய்
- சோஸ்
செய்முறை
-
முதலில் பாசிப்பருப்பை தண்ணீர் ஊற்றி 30 நிமிடங்களுக்கு ஊற வைத்துக்கொள்ளவும்.
- பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அதில் வெட்டி வைக்கப்பட்ட வெங்காயம், குடை மிளகாய் மற்றும் ஸ்வீட் சோளம் சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ளவும்.
- அடுத்து மிக்ஸில் ஊற வைத்தள்ள பாசிப்பருப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
- அரைத்து எடுத்த கலவையுடன் பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், எலுமிச்சை சாறு, ரவை மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ளவும்.
- தோசை சுடுவது போன்று இந்த மாகலவையை ஊற்றி சுட்டு எடுக்கவும்.
- ஒரு பக்கம் வெந்தவுடன் திருப்பிப்போட்டு மற்றைய பக்கத்தில், சோஸ் ஊற்றி பரவிக்கொள்ளவும்.
- அதில் எண்ணெயில் வதக்கி வைத்த அனைத்தையும் சேர்த்து, சீஸ் துண்டுகளையும் சேர்த்து மூடி 3 நிமிடத்திற்கு வேக வைத்து எடுத்தால் சுவையான பாசிப்பருப்பு Pizza தயார்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US