வெள்ளைமுடியை நிரந்தரமாக கருப்பாக்க உதவும் இயற்கை சாயம்.., எப்படி தயாரிப்பது?
பொதுவாக அனைவர்க்கும் முடி உதிர்தல், வலுவிழந்த முடி, வறண்ட முடி, பொடுகு மற்றும் நரைமுடி போன்ற பிரச்சனைகள் இருக்கிறது.
அந்தவகையில், இயற்கை முறையில் நரைமுடியை கருப்பாக மாற்ற உதவும் இயற்கை சாயத்தை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கறிவேப்பிலை- 1 கைப்பிடி
- தேங்காய் எண்ணெய்- 3 ஸ்பூன்
- வேப்ப இலை- 1 கைப்பிடி
- வைட்டமின் ஈ கேப்சூல்கள்- 2
- தயிர்- 2 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் கறிவேப்பிலை மற்றும் வேப்பிலையை மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு மற்றொரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய், வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் மற்றும் தயிர் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்துக் கொள்ளவும்.
பின்னர் இந்த கலவையை சிறிது சூடாக்கி ஆறிய பின் கறிவேப்பிலை மற்றும் வேப்ப இலை கலவையை சேர்த்து நன்றாக கலக்கவும்.
பின் முடி மற்றும் உச்சந்தலையில் தயார் செய்து வைத்துள்ள ஹேர் மாஸ்க்கை தடவி ஒரு மணி நேரம் கழித்து கூந்தலை கழுவவும்.
இதனை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து பயன்படுத்தி வர நரைமுடியை விரைவிலேயே கருமையாக மாறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |