ஒரே வாரத்தில் உதிர்ந்த முடியை வளர்க்க உதவும் எண்ணெய்.., எப்படி தயாரிப்பது?
பொதுவாக ஆண், பெண் என இருவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை முடி உதிர்வு.
அந்தவகையில், முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் எண்ணெய்யை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சின்ன வெங்காயம்- 2
- விளக்கெண்ணெய்- 1 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்
- கடுகு எண்ணெய்- 1 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் சின்ன வெங்காயத்தை தோலை உரித்து நன்றாக கழுவி வெங்காயத்தை நசுக்கி எடுத்துக் கொள்ளவும்.
நசுக்கி வைத்த வெங்காயத்தின் மீது ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணையை ஊற்றி நன்கு கலந்து இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
பின்னர் காலை எழுந்ததும் அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து அதோடு கடுகு எண்ணெயை சேர்த்து நன்றாக கலக்கவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் மூன்று கிளாஸ் தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.
அடுத்து ஊறவைத்த எண்ணெயை சிறிய பாத்திரத்தில் எடுத்து, கொதிக்கும் தண்ணீரில் மிதக்க வைத்து எண்ணெய் சூடான பின்பு அதை தனியாக எடுக்கவும்.
இந்த எண்ணையை லேசான சூட்டில் கூந்தல் மற்றும் உச்சந்தலை முழுவதும் நன்றாக தடவி அரை மணி நேரம் அப்படியே ஊற வைக்கவும்.
இறுதியாக மென்மையான ஷாம்பு கொண்டு கூந்தலை அலசிக்கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |