முழங்கால் வரை முடி வளர இந்த ஒரு பொடி போதும்.., எப்படி பயன்படுத்துவது?
பொதுவாக பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் முடி உதிர்வு.
தூக்கமின்மை, உணவு முறை, மருந்து மாத்திரைகள் உண்பது போன்ற காரணங்களால் முடி உதிர்வு பிரச்சனைகள் ஏற்படுகிறது.
அந்தவகையில், முழங்கால் வரை முடி வளர மருதாணி பொடியை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- மருதாணி பொடி- 5 ஸ்பூன்
- நெல்லிக்காய் பொடி- 5 ஸ்பூன்
- முட்டை- 2 எலுமிச்சை- 1
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் மருதாணி பொடி, நெல்லிக்காய் பொடி, முட்டை மற்றும் எலுமிச்சை சாறை சேர்த்துக்கொள்ளவும்.
பின் இந்த அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கெட்டியான பேஸ்ட்போல் கலக்கவும்.

இந்த கலவையை தலைமுடி மற்றும் உச்சந்தலையில் தடவி, சுமார் ஒரு மணி நேரம் ஊறவிடவும்.
அதற்கு பின்னர், மென்மையான ஷாம்பு கொண்டு தலையை அலசிக்கொள்ளலாம்.
2. தேவையான பொருட்கள்
- முல்தானி மிட்டி- 2 ஸ்பூன்
- மருதாணி பொடி- 2 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் முல்தானி மிட்டி மற்றும் மருதாணி பொடியை எடுத்துக் கொள்ளவும்.
பின் இதில் தண்ணீர் சேர்த்து மென்மையான பேஸ்ட் போல் கலக்கவும்.
இதனை தலையில் நன்கு தடவி ஒரு மணி நேரம் கழித்து மென்மையான ஷாம்பூ பயன்படுத்தி தலைமுடியை அலசிக்கொள்ளலாம்.
இந்த கலவையை வாரத்திற்கு ஒரு முறை என தொடர்ந்து பயன்படுத்தி வர முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளரும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |