கருமையான முழங்கால்களை வெள்ளையாக மாற்ற உதவும் வீட்டு வைத்தியம்
கருமையான முழங்கால்கள் அனைத்து வயதுடையவருக்கும் உள்ள பொதுவான பிரச்சனையாகும்.
சில நபர்கள் தங்கள் முழங்கால்களை ஒளிரச் செய்வதன் மூலம் சருமத்தின் நிறத்தை சமன் செய்ய விரும்புகிறார்கள்.
அந்தவகையில், கருமையான முழங்கால்களை வெள்ளையாக மாற்ற உதவும் வீட்டு வைத்தியம் குறித்து பார்க்கலாம்.
எலுமிச்சை
எலுமிச்சை சாற்றை முழங்கால்களில் 30 நிமிடங்கள் தடவி பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் இறந்த சரும செல்களை அழித்து வெண்மையான நிறத்திற்கு உதவும்.
மஞ்சள்
பாலில் மஞ்சள் தூள் கலந்த பேஸ்ட்டை முழங்கால்கள் மற்றும் முழங்கைகளில் மெதுவாக மசாஜ் செய்து 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
கூடுதல் ஈரப்பதத்திற்கு மஞ்சள் பேஸ்ட்டைக் கழுவிய பின் சில துளிகள் தேனைப் பயன்படுத்துங்கள்.
பேக்கிங் சோடா
ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒரு டீஸ்பூன் பாலுடன் சேர்த்து கலந்த பேஸ்ட்டை முழங்கால்கள் மற்றும் முழங்கைகளில் தடவி 2 முதல் 3 நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும்.
இதன் பின் உலர விட்டு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும்.
கற்றாழை
ஜெல் படுக்கைக்குச் செல்வதற்கு முன் முழங்கால்களின் கருமையான பகுதிகளில் கற்றாழை ஜெல்லை தடவவும்.
கற்றாழை ஜெல்லை தடவி இரவு முழுவதும் அப்படியே விடவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |